ஸ்தல பெருமை
மூலஸ்தானத்தில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கம்பீரமாக நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். 11 அடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. தெற்கு திசை நோக்கி நின்று கிழக்கு நோக்கிய பார்வையுடன் காணப்படுகிறார். அவரது திருவடிகளில் சனீஸ்வரனை மிதித்தபடி காட்சி அளிக்கின்றார். கோவிலின் முன்புறமுள்ள தீபஸ்தம்பத்தில் விளக்கேற்றி பிரார்த்தித்தால் நினைத்த காரியம் கை கூடும் அப்பொழுது வானத்தில் கருடன் வட்டமிடும் என்பது ஐதீகம்.
பரிகாரங்கள்
சனி கிரக தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்க பரிகார ஸ்தலம் அமைவிடம்
திருப்பத்தூர் மாவட்டம்,
ஆம்பூர் நகரத்தின் மையப் பகுதியில்
கஸ்பா-A, மெயின் ரோட்டில் அமைந்துள்ளது.
