ஸ்ரீ ஆஞ்சநேயர் போற்றி
ஸ்ரீ ஆஞ்சநேயர் போற்றி

- ஓம் அஞ்சனை மைந்தா போற்றி
- ஓம் அஞ்சினை வென்றாய் போற்றி
- ஓம் சொல்லின் செல்வா போற்றி
- ஓம் வில்லின் கணையே போற்றி
- ஓம் தோத்திரப் பிரியா போற்றி
- ஓம் சாத்திரத் தலைவா போற்றி
- ஓம் சத்திய விரதா போற்றி
- ஓம் வித்தகு வீரா போற்றி
- ஓம் ஏழிசை நிதியே போற்றி
- ஓம் ஆழியைக் கடந்தாய் போற்றி
- ஓம் தன்பலம் அறியாய் போற்றி
- ஓம் என்னகம் நிறைவாய் போற்றி
- ஓம் பிரம்மச் சரியா போற்றி
- ஓம் பரமன் சொரூபா போற்றி
- ஓம் பேரறிவாளா போற்றி
- ஓம் சீருப காரா போற்றி
- ஓம் அச்சுதன் துணைவா போற்றி
- ஓம் வச்சிர வடிவா போற்றி
- ஓம் பிங்கள வர்ணா போற்றி
- ஓம் மங்கள ரூபா போற்றி
- ஓம் புஜபல தீரா போற்றி

- ஓம் விஜயன் துணைவா போற்றி
- ஓம் சிரஞ்சீ வியனே போற்றி
- ஓம் பரஞ்சுட ரொளியே போற்றி
- ஓம் அருணனை வென்றாய் போற்றி
- ஓம் தருண மழையே போற்றி
- ஓம் வானரச் செல்வா போற்றி
- ஓம் தீனரட் சகனே போற்றி
- ஓம் வாயுபுத் திரனே போற்றி
- ஓம் தூயரத்தினமே போற்றி
- ஓம் இலக்குவன் உயிரே போற்றி
- ஓம் கலக்கமும் தீர்ப்பாய் போற்றி
- ஓம் ஐம்புலம் வென்றாய் போற்றி
- ஓம் எம்குலா தேவா போற்றி
- ஓம் இராம தூதா போற்றி
- ஓம் நாமப் பிரியா போற்றி
- ஓம் மந்தமா ருதமே போற்றி
- ஓம் சிந்தனைச் செல்வா போற்றி
- ஓம் சஞ்சீவி ராயா போற்றி
- ஓம் பஞ்ச முகனே போற்றி
- ஓம் விசுவ ரூபா போற்றி
- ஓம் விசுவேஸ்வரனே போற்றி
- ஓம் ஆஞ்சநேயா போற்றி

- ஓம் வாஞ்சை யானாய் போற்றி
- ஓம் சுக்ரீவ சகனே போற்றி
- ஓம் துக்கம் களைவாய் போற்றி
- ஓம் யோகனு மானே போற்றி
- ஓம் ஆகமும் அறிந்தாய் போற்றி
- ஓம் லங்கநா சனனே போற்றி
- ஓம் தங்க மேனியனே போற்றி
- ஓம் புதிரானவனே போற்றி
- ஓம் கதியானவனே போற்றி
- ஓம் ஆற்றல் வடிவா போற்றி
- ஓம் போற்றல் உடையாய் போற்றி
- ஓம் அறிவாலயனே போற்றி
- ஓம் நெறிகற் றவனே போற்றி
- ஓம் ஈரநெஞ் சுடையாய் போற்றி
- ஓம் நாரணன் துணையே போற்றி
- ஓம் விக்குலத் திலகா போற்றி
- ஓம் பவித்திர மானாய் போற்றி
- ஓம் பிங்காட் சகனே போற்றி
- ஓம் சங்கடம் தீர்ப்பாய் போற்றி
- ஓம் விண்ணில் பறந்தாய் போற்றி
- ஓம் கண்ணில் நிறைந்தாய் போற்றி
- ஓம் கேஸரி மகனே போற்றி

- ஓம் பாசம் உடையாய் போற்றி
- ஓம் வீடணன் துணையே போற்றி
- ஓம் நாடரும் நலனே போற்றி
- ஓம் வாலுடை வரதா போற்றி
- ஓம் சீலமும் உடையாய் போற்றி
- ஓம் மாபெரும் தொண்டா போற்றி
- ஓம் தாபம் தொலைப்பாய் போற்றி
- ஓம் இராமேஷ் டகனே போற்றி
- ஓம் சேஷமமளிப்பாய் போற்றி
- ஓம் அமிதவிக் ரமனே போற்றி
- ஓம் எமையனு கிடுவாய் போற்றி
- ஓம் அனிலாத் மஜனே போற்றி
- ஓம் நினைவில் உறைவாய் போற்றி
- ஓம் ருத்திரப் பிரியா போற்றி
- ஓம் முத்திரைப் பொன்னே போற்றி
- ஓம் பிலவகேஸ் வரனே போற்றி
- ஓம் கலை கற்றவனே போற்றி
- ஓம் அட்சயத் துவேசா போற்றி
- ஓம் சட்டென வருவாய் போற்றி
- ஓம் கனிகள் உண்பாய் போற்றி
- ஓம் நனிசுகம் தருவாய் போற்றி
- ஓம் மஹாப லிஸ்டா போற்றி

- ஓம் சகாய தேவா போற்றி
- ஓம் அஹிமஹி மர்த்தன போற்றி
- ஓம் சசிவோத் தமனே போற்றி
- ஓம் வராக முகனே போற்றி
- ஓம் சரீர சுகனே போற்றி
- ஓம் கருட முகனே போற்றி
- ஓம் கடிவிஷம் தீர்ப்பாய் போற்றி
- ஓம் ஹயக்கி ரீவா போற்றி
- ஓம் மயக்கம் தீர்ப்பாய் போற்றி
- ஓம் நரசிம் மமுகா போற்றி
- ஓம் நடுநிலை யருள்வாய் போற்றி
- ஓம் வீரனு மானே போற்றி
100.ஓம் தீரம் அருள்வாய் போற்றி
- ஓம் தவப்பிர காசா போற்றி
102.ஓம் சிவப்பிர காசா போற்றி
103.ஓம் உருவில் உயிரே போற்றி
104.ஓம் உயிரின் உணர்வே போற்றி
105.ஓம் செல்வம் தருவாய் போற்றி
106.ஓம் அல்லல் ஒழிப்பாய் போற்றி
107.ஓம் விரைவில் வருவாய் போற்றி
108.ஓம் நிறைவைத் தருவாய் போற்றி
போற்றி! போற்றி !!